Monday 31 October 2011




























Thursday 20 October 2011

கவிதை

கவிதை கல்கி 

அம்மாவின் அக்கறை


அம்மாவின் அக்கறை ;

       ''அம்மா !இன்னிக்கு ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் நடந்துச்சு ;நான்தான் முதல் !''

உற்சாகம் கொப்பளித்தது ராகுலின் குரலில் .

''அப்புறம் ...''சட்டென இடைமறித்தாள் பார்கவி .''ராகுல் !முதல்ல கை ,கால் ,முகம் கழுவீட்டு வா !பால் குடிச்சிட்டு ட்யு சனுக்கு கிளம்பற வழியப் பார் ..''
கண்டிப்பான குரலில் கூறிவிட்டு இரவு சமையலை கவனிக்க சென்றாள்பார்கவி 

ஏழு மணி .'ஆனந்தமாய் 'சீரியலில் மூழ்கியிருந்தாள்.அப்போது தான் ட்யூசன்முடிந்து வீடு திரும்பியிருந்தான் ராகுல் .

''அம்மா !இன்னிக்கு நான் புதுசா ஒரு டிராயிங் போட்டேன் .எங்க மிஸ்சும்,பிரெண்ட்சும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க .நீயும் பாரும்மா 
அவன் ஆசையாய் நீட்டியதைக் கையில் வாங்காமல் ,''அப்படி வெச்சுட்டு போ !அப்புறம் பாக்கறேன் ''என்றாள் டி .வி .யிலிருந்து கண்களை எடுக்காமல் .

ராகுல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் .சிறிது நேரம் கழித்து ''அம்மா ,பசிக்குது ;சாதம் போடும்மா ..''என்று அவள் முன் வந்து நின்றான் .

''டேபிள் மேல தான் எல்லாத்தையும் எடுத்து வச்சுருக்கேன்ல.நீயே போட்டு சாப்பிட்டுக்கோ'' என்றாள் எரிச்சலுடன் .

''எனக்கு ரெண்டு அப்பளம் பொரிச்சு தாம்மா ,ப்ளீஸ்!''

''ஊறுகாய் தொட்டு சாப்பிடுடா .ரொம்ப முக்கியமான ஸீன்! என்னை நிம்மதியாய் சீரியல் பாக்க விட்டுத் தொலை ..''அதட்டல் போட்டு அவனை நகர்த்தினாள்.

எட்டு மணிக்கு வேறு சேனல் மாற்றி பார்க்கத் தொடங்கினாள்.கன்னத்தில் கை வைத்தபடி சுவாரஸ்யமாக 'அஞ்சலியில் ஆழ்ந்திருந்தவளின் தோள்தொட்டு உசுப்பினான் ராகுல் .

''ச்சே !உன்னோட ஒரே தொல்லையாப் போச்சு !''சீறினாள் பார்கவி .

''உனக்கு ஏற்கனவே அல்சர் இருக்கு .நீ கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும்னு
டாக்டர் சொல்லியிருக்கார்ல ....அப்பா வேற ஊர்ல இல்ல .நான்தானே உன்னை அக்கறையாப் பார்த்துக்கணும் .சாப்பாடு போட்டு எடுத்திட்டு வந்திருக்கேன் .சாப்பிடும்மா.....''என்றவாறு தட்டை நீட்டினான் ஒன்பது வயது 
ராகுல் .

கண்களில் நீர் மல்க மகனை வாரி அணைத்துக் கொண்டாள் பார்கவி . 

     [5.8.2007] கல்கி இதழில் வெளி வந்த என் சிறுகதை 






அஞ்சு ரூபாய் அதட்டல்

அஞ்சு ரூபாய் அதட்டல் 

Thursday 13 October 2011

                                                                                                                                         14.10.11
                                                                                                                                          11.a.m
படித்ததில் பிடித்தது ;

சமீபத்தில் ShivKhera வின் ''You can win'' படித்தேன் .அதிலிருந்து சில 'நச்'வரிகளை இங்கே தமிழில் மொழி மாற்றம் செய்து கொடுக்கிறேன் ;

*வெற்றியாளர்கள் வித்தியாசமான வேலைகளை செய்வதில்லை .
 அவர்கள் செய்யும் வேலைகளையே வித்தியாசமாக செய்கிறார்கள் .

* வெற்றியாளர்கள் -தோல்வியாளர்கள் ஒரு ஒப்பீடு ;

வெ-''இதை உங்களுக்காக நான் செய்து தருகிறேன் ''
தோ-''இது என் வேலை அல்ல ''

வெ --''ஒவ்வொரு பிரச்னைக்கும் பதில் தர தயாராக இருப்பார் .
தோ -ஒவ்வொரு பதிலுக்கும் பிரச்னையை யோசிப்பார் 

*வெ --திட்டங்கள் வைத்திருப்பார் 
 தோ --கனவுகள் மட்டும் வைத்திருப்பார் 

*வெ --மென்மையான வார்த்தைகள் கொண்டு ஆணித்தரமாக வாதாடுவார்கள் 
 தோ --கடுமையான வார்த்தைகள் பயன் படுத்துவார் .ஆனால் ,மேலோட்டமாக வாதாடுவார் .

            ரவிஷனா.
எனக்குப் பிடித்த பொன்மொழிகள் ;

''பாடத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ;பாட வேண்டும் போல் தோன்றினாலே அன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக 
அமையும் .''

''தங்கத்தில் அங்கி வேண்டும்மென்று விரும்புங்கள் .தங்கத்தில் கைக்குட்டையாவது கிடைக்கும் ''

'''உலகத்தை குறுகலாக பார்த்தால்,அது குறுகலாக தெரியும் .மட்டமாகப் பார்த்தால் மட்டமாகத் தெரியும் .சுயநலத்தோடு பார்த்தால்,சுயநலமாகத் தெரியும் .பரந்த ,தாராளமான ,சினேகிதமான மனத்தோடு பாருங்கள் .அற்புதமான மனிதர்கள் உங்கள் கண்ணில் படுவார்கள் ''

''நீங்கள் சிலரை எல்லா நேரத்திலும் ஏமாற்றலாம் :எல்லாரையும் சில நேரத்தில் ஏமாற்றலாம் ; ஆனால் ,எல்லாரையும் ,எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது ''.





கோகுலம் தமிழ்

கோகுலம் தமிழ் 

என் அனுபவம்

டிசம்பர்-9-2006 பெண்கள் மலர் 

Monday 10 October 2011

அதற்க்கென்று ஒரு இடம்


அதற்கென்று ஒரு இடம்

- ரவிஷ்னா
'டாக்டர் ராகவ் எம் .எஸ்.,ஆர்த்தோ ' என்று பளபளத்த பெயர்ப் பலகையை சற்றே வெறுப்புடன் நோக்கினார் பெரியவர் சபேசன் .

ராகவ் அவரது எதிர் பிளாட்டிற்கு புதிதாய் குடி வந்திருக்கும் இளம் டாக்டர்.

அன்று மாலை அவனது வீட்டிற்கு சென்ற சபேசன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சிறிது நேரம் பொதுவாய் பேசிக் கொண்டிருந்து விட்டு, "எனக்கு மூட்டு வலி பாடாப்படுத்துது" என்றார்.
"கிளினிக் வாங்க...பாத்துரலாம்.. இப்ப அங்க தான் கிளம்பிட்டிருக்கேன.. இதோ என் விசிட்டிங் கார்ட்" என்று நீட்டினான் ராகவ்.

சுருக்கென்றது சபேனுக்கு. 'டாக்டர் என்ற ஹோதாவைக் காண்பிக்கிறானா?ஆஸ்பத்திரிக்கு வர சொன்னால்தானே ப்ளட் டெஸ்ட், ஸ்கேன்,  எக்ஸ்ரே என்று சொல்லி ஆயிரம், இரண்டாயிரம் என்று பிடுங்கலாம்.. இள ரத்தத்தின் திமிர்..' மனதிற்குள் பொருமினார் .

கிளினிக் அடுத்த தெருவில் இருந்தது. அங்கே வந்து காத்து கிடந்து, ஒன்றரை மணி நேரம் கழித்து உள்ளே அழைக்கப்பட்டார் சபேசன்.

அவரை பொறுமையாய் பரிசோதித்த ராகவ், "இந்த மாத்திரையை தினம் ராத்திரி ஒண்ணு போடுங்க.. இந்த ஜெல்லை மூட்டுகள்ல தடவுங்க.. ஒரு அரைமணி நேரம் தினமும் வாக் போங்க... அப்புறம் கையை, காலை நீட்டி சில பயிற்சிகள்.. அதை எப்படி பண்ணனும்னு அடுத்த ரூம்ல இருக்க என் உதவியாளர் சொல்லித் தருவார்.. பதினஞ்சு நாள் கழிச்சு மறுபடி வாங்க" என்றான்.

"தேங்க்ஸ் சார்.. பீஸ் எவ்வளவு?" என்றவரை புன்முறுவலோடு ஏறிட்டான் ராகவ்.

"க்ளினிக்ல தான் டாக்டர்கிட்ட பேஷன்ட் ஒளிவு மறைவில்லாம தன் உடல் சம்பந்தமான பிரச்னைகளை சொல்லலாம்; காட்டலாம்.. இங்க உங்களை 'கவுச்'ல படுக்க வெச்சு டெஸ்ட் பண்ணினேன்.. என் வீட்டுல இப்படி முடியுமா.? அப்புறம் பக்கத்துக்கு வீட்டுக்காரங்க கிட்ட நான் பீஸ் வாங்கறதில்லை...''

ராகவ் சொல்ல சொல்ல வெட்கிப் போனார் சபேசன்.
(என்னுடைய கதை யூத்புல் விகடனில் வந்தது. )